Wednesday, February 9, 2011

தலையணை.....



நான்
அணைக்கும் பொழுதுகளில்
அவனாகவும்
அவன்
அணைக்கும் பொழுதுகளில்
நானாகவும்
உருமாறும் தலையணை
ஆண்பாலா????? பெண்பாலா????...

சுரேகா முருகேசன்.......

குரல்...



நினைவுகள் சூழ்ந்த
நிதர்சமான அந்திப் பொழுதில்
இதமாக இருந்தது
என்றோ என் கைபேசியில்
நான் பதிந்து வைத்திருந்த
அவனின்
மனதை மயக்கும் குரல்...

சுரேகா முருகேசன்.......

புன்னகை........




கைக்கெட்டாமல் கனவாக இருந்தது- இன்று
கையில் கிடைத்தது......
கனவோ நினைவோ என்று
பதறிய மனதுக்குள் திடீர் சிலிர்ப்பு
உண்மைதான் .......
என் கரங்களை பிடித்தது
அவன் கரங்களே....
நீடிக்குமோ இந்த சுகம் என்று
அவனை ஏக்கமாய் பார்த்தேன்......
இனி உன்னைவிட்டு பிரியமாட்டேன் என்று
சொன்னது அவனின் அழகிய புன்னகை........

சுரேகா முருகேசன்.......

Tuesday, December 28, 2010

காதல் இசை..

நீ தொட்டு ரசித்ததாலோ என்னவோ
என் பாத சரங்கள்
காதல் காதலேன்றே
இசைக்கின்றது .......

சுரேகா முருகேசன்.......

Friday, December 3, 2010

மௌனமாய் நினைத்துக் கொண்டேன்........

என்றோ அவன்
என் மீது விளையாட்டாய்
எரிந்த கற்கள்
இன்றும் என் வீட்டுக் கண்ணாடிக் கூண்டில்
அழகிய ஞாபகச் சின்னமாய்....
அவன் கையெப்பமிட்டு கிறுக்கி
தூக்கி எரியப்பட்ட காகிதம்
இன்றும் என் கைப்பையில்
பத்திரமாக குடிகொண்டுள்ளது......
அவன் எனக்காக வாங்கிக்கொடுத்த
மிட்டாயின் காகிதங்கள்
என் அறையில் ஆங்காங்கே அவனை
ஞாபகபடுத்திக் கொண்டிருகின்றது.......
இப்படி அவன் கைப்பட்ட ஒவ்வொரு
பொருளையும் பார்த்துவிட்டு
செல்லமாய் என் தலையில் தட்டிவிட்டு
சிரித்துக்கொண்டே கூறினான்
" இவ எப்போதுமே இப்பிடித்தா
கண்டதையும் குப்ப மாதிரி சேர்த்து வைப்பா"
என்று தன் மனைவியிடம்........
நானும் மௌனமாய் சிரித்துவிட்டு
மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்
" நீயும் எப்பொழுதும் போலத்தான் இன்னும் என்னை
புரிந்து கொள்ளவில்லை என்று"

சுரேகா முருகேசன்.......

Monday, November 15, 2010

மௌனராணி......


எதேதோ பேச என்னி
ஓராயிரம் வார்த்தைகளை
ஒய்யாரமாக அணிவகுத்து
ஓராயிரம் முறை ஒத்திகைப் பார்த்து
உன் முன் வந்ததும் ஏனோ
என் மௌனராணி என்னை
ஆக்கிரமித்துக்கொள்கிறாள்...............

சுரேகா முருகேசன்.......

உன்னவளாய்......

உன் மூச்சு
என் ஸ்பரிசம் தொட்டு
உணர்ச்சிகளை கடந்து
உள்ளூர விளையாடி
ஒவ்வொரு அணுக்களிடத்தும் உறவாடி
குருதியுடன் கலந்தோடும் வேளையில்
உன்னவளாய்
நான் இருக்கும் காலம்
உண்மையில் நடந்தேருவது
எப்போது??